ரஜினியின் 2.ஓ படத்தில் அக்ஷய் குமாருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் யார் குரல் கொடுப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
ரஜினியின் 2.ஓ மூலம் தமிழில் புதியதாக அறிமுகமாகிறார் அக்ஷய்குமார். இந்தப் படத்தின் ஹிந்தி டப்பிங்கை அவரே சொந்தமாக பேச இருக்கிறார். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் தமிழில் அவருக்கு சரியாக பொருந்தி போகும் ஒரு குரலை இன்னும் படக்குழு கண்டுப்பிடிக்கவில்லையாம். அதே போலவே தெலுங்கிலும் யாரை வைத்து டப்பிங் பேச வைக்கலாம் என யோசனை செய்து வருகிறார்கள். அதற்கான குரல் தேடல் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் அதை தேடிக் கண்டடைவோம் என ஆஸ்கர் வெற்றியாளர் ரசூல் பூக்குட்டி கூறியிருக்கிறார்.