சினிமா

அக்‌ஷய்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

webteam

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “ எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா விதிமுறைகளின் படி, நான் என்னை எனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தயவு செய்து என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதுது நடிகர் அக்ஷய் குமார் ‘ராம் சேது’ படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக நடிகர்கள் ஆமிர்கான், ரன்பீர் கபூர், மிலிந்த் சோமன், மாதவன், ஆலியாபட் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.