சினிமா

அஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்

அஜித் படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்

webteam

தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. ஏக் ப்ரேம் கதா என்னும் சமூக விழிப்புணர்வு படத்தை தொடர்ந்து கமர்சியல் படமான ஹிந்தி ரீமேக்கில் வீரம் படத்தில் நடிக்க இருக்கிறார் அக்‌ஷய் குமார்.

2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தப்படத்தை அக்‌ஷய் குமாரின் நெருங்கிய நண்பர் சஜித் இயக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் ஒன்பதாவது படம் இது. அக்‌ஷய் குமார் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது.