சினிமா

நடிகை பாலியல் விவகாரம்: நடிகர் அக்‌ஷய் குமார் புகார்

நடிகை பாலியல் விவகாரம்: நடிகர் அக்‌ஷய் குமார் புகார்

webteam

நடிகைக்கு எதிராக தான் பேசுவது போன்று போலியான வீடியோ வெளியானதை அடுத்து நடிகர் அக்‌ஷய் குமார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ கொடுத்த பாலியல் புகார் விவகாரம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. இதையடுத்து அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபல இந்தி நடிகரும் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவருமான அக்‌ஷய்குமாரின் மனைவி டிவிங்கிள் கண்ணாவும் நடிகைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரிடம், எனக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். ஆனால், உங்கள் கணவர், நானா படேகருடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இது என்ன நியாயம்?’ என்று கேட்டிருந்தார். இது பரபரப்பானது.

இந்நிலையில் நடிகை தனுஸ்ரீக்கு எதிராக நடிகர் அக்‌ஷய்குமார் பேசுவது போன்ற வீடியோ ஒன்று நேற்று வெளியாகி வைரலா னது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்‌ஷய்குமார், இது போலியானது என்று பாந்த்ரா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதில், ’தான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக கருத்து கூறியது போல சித்தரித்து யாரோ வீடி யோ வெளியிட்டுள்ளனர். அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.