சினிமா

விக்ரம் மகன் துருவுக்கு அக்‌ஷரா ஹாசன் ஜோடி?

விக்ரம் மகன் துருவுக்கு அக்‌ஷரா ஹாசன் ஜோடி?

webteam

பாலாவின் ‘வர்மா’வில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை சந்தீப் ரெட்டி இயக்க இருந்தார். சின்ன பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம் முதலில் அளவான திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. அதன் வரவேற்பை தொடர்ந்து நிறைய இடங்களில் திரையிடல் செய்யப்பட்டது. இதில் விஜய் தேவர்கொண்டா கதாநாயகாக நடித்திருந்தார். ஷாலினி பாண்டே நாயகியாக நடித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 41 கோடிக்கு மேல் வசூல் செய்தது. ஆகவே இதன் தமிழ் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியாக நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் இதன் தமிழ் வெர்ஷனில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக அறிமுகமாக இருப்பதாக இன்ஸ்ட்ராகிராமில் அறிவித்தார். தமிழ் ரீமேக்கை பாலா இயக்குவதாகவும் தெரிவித்தனர். தமிழில் இதற்கு ‘வர்மா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என தேடல் படலம் தொடங்கியுள்ள நிலையில், கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவர தொடங்கியுள்ளது.