அஜித் குமார் நடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்தத் திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று மாலை 'வலிமை' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்படுகிறது.
இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் Glimpse ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிடுகின்றனர். மேலும் சில நாட்கள் இடைவெளியில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள மற்ற பாடல்களையும், படத்தின் ட்ரைலரையும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.