சினிமா

’வேதாளம்’ வில்லன் திருமண நிச்சயதார்த்தம்!

’வேதாளம்’ வில்லன் திருமண நிச்சயதார்த்தம்!

webteam

வில்லன் நடிகர் கபீர் துஹன் சிங் -பாடகி டோலி சிந்து திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.

தமிழில் அஜீத்தின் ’வேதாளம்’, விஜய் சேதுபதியின் ’றெக்க’, ’மெஹந்தி சர்க்கஸ்’, ’காஞ்சனா 3’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் கபீர் துஹன் சிங். இப்போது சித்தார்த் நடிக்கும் ’அருவம்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஹரியானாவைச் சேர்ந்த இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். இவரும் இந்தி பட பின்னணி பாடகி டோலி சிந்துவும் காதலித்து வந்தனர். 

இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. இதை, கபீர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.