அஜித் புதிய படத் தலைப்பு இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
பொதுவாக தனது படங்களுக்கான தலைப்பை கடைசி வரை அறிவிக்காமலே இருப்பதுதான் அஜித் ஸ்டைல். ஆனால் இந்த முறை படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பை பட நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்கிறார். படத்திற்கு விசுவாசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். படப்பிடிப்புகள் ஜனவரி 2018ல் தொடங்குகிறது. படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைப்பு வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவிலான ட்ரெண்ட்டில் படம் இடம் பிடித்துள்ளது.