சினிமா

அடுத்த வாரத்தில் நிறைவடையும் ‘வலிமை’ படப்பிடிப்பு?

sharpana

’வலிமை’படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் அடுத்த வாரத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. இன்னும் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த சண்டைக் காட்சிக்காக ஓரிரு தினங்களில் அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த வாரம் தொடங்கும் இந்த சண்டைக் காட்சிகளை 5 நாட்கள் எடுக்கவிருக்கிறார்கள். இந்த சண்டைக்காட்சியோடு ‘வலிமை’ படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் அடுத்தவார இறுதிக்குள் நிறைவடைவதாகவும் இதன்பின்னரே, ’வலிமை’ முதல் பாடலையும் வெளியீட்டு தேதியையும் அறிவிக்கவிருக்கிறது படக்குழு என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.