சினிமா

சென்னை ஆர்ட் கேலரி கண்காட்சியில் அஜீத் எடுத்த புகைப்படங்கள் !

சென்னை ஆர்ட் கேலரி கண்காட்சியில் அஜீத் எடுத்த புகைப்படங்கள் !

webteam

சென்னையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அஜீத் குமார் எடுத்த புகைப்படங்களை இயக்குநர் சிவா பார்வையிட்டார்.
அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள அஜீத் குமார் நடிப்பையும் தாண்டி மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராகவும், கார் பந்தய வீரராகவும், சமையல் கலைஞராகவும் அறியப்பட்டு வருகிறார். அவர் ஷூட்டிங் இடைவெளியிலும், பொழுதுபோக்காவும் புகைப்படங்களை எடுத்து சேகரித்து வருவதோடு தன்னுடன் நடிக்கும் சில நடிகர் நடிகைகளுக்கும் மாடலிங் போட்டோக்களை அவ்வப்போது எடுத்து கொடுத்து வருகிறார்.  
இந்நிலையில் அவர் எடுத்த மிகச் சிறந்த புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக சென்னை டிடிகே சாலையில் உள்ள ஆர்ட் கேலரியில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு சென்று அஜீத் எடுத்த புகைப்படங்களை ரசித்து வந்த இயக்குநர் சிவா இந்தத் தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில் ‘சிறந்த ப்ரபொசனல் போட்டோகிராஃபராக உருவெடுத்துள்ள தல அஜீத்திற்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். 
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை சிவா இயக்கி வருகிறார்.