சினிமா

ட்விட்டரில் டிரெண்ட் ஆன அஜித் பிறந்தநாள்

ட்விட்டரில் டிரெண்ட் ஆன அஜித் பிறந்தநாள்

webteam

அஜித் பிறந்த நாளிற்கு இன்னும் முழுமையாக ஒரு மாதம் இருக்கும் நிலையில் ட்விட்டரில் அவரது பிறந்தநாள் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என தலையில் வைத்து கொண்டாடப்படுபவர் அஜித். உழைப்பாளர் தினமான மே 1 அவரது பிறந்தநாள். வழக்கமாக அவரது பிறந்தநாளையொட்டி அவர் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை. அதேபோல அவரது ரசிகர்களை கூட அவர் சந்திப்பதில்லை. அதானல் என்ன? அவரது ரசிகர்கள் அவர் குறித்த ஒவ்வொரு செய்தியையும் ட்ரெண்ட் ஆக்கிவிடுகிறார்கள். 

இந்தநிலையில் இன்று அவரது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் போது அதற்கு ட்விட்டரில் #1MonToThalaAJITHBDayFest ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இவரை போலவே ‘தல’ தோனிக்கு பிறந்தநாள் வர இன்னும் 100 நாள் இருக்கிறது. ஆனால் அந்தச் செய்தியும் நேற்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. 

மே1 அன்று அஜித் புதிய படம் பற்றிய செய்திகள் வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.