சினிமா

விஜய் பாடலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் ‘அகலாதே’ பாடல் 

விஜய் பாடலை பின்னுக்கு தள்ளிய அஜித்தின் ‘அகலாதே’ பாடல் 

webteam

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடல், விஜய்யின் ‘சிங்கப் பெண்ணே’ பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. 

இந்தி படமான ‘பிங்க்’,  ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடித்துள்ளார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ‘அகலாதே’ பாடல் நேற்று மாலை வெளியானது. இந்தப் பாடல் ‘பிகில்’ படத்தின் பாடல் சாதனையை முறியடித்துள்ளது. அகலாதே பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

முன்னதாக விஜய் நடித்துவரும் ‘பிகில்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்கப் பெண்ணே' பாடல் கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. பாடல், யு டியூபில் வெளியான 40 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.