சினிமா

அஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்?

அஜித்தின் ‘தல 60’படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்?

webteam

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கும் பெயரிடப்படாத அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்  தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில்  எடுக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்துள்ள இந்தப் படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அஜித்தில் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29 முதல் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் முழுவதும் தென் ஆப்பிரிக்கா பகுதியில் எடுக்க உள்ளதாக தெரிகிறது.

 படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் போனிகபூர், “தல 60 படத்தில் அஜித் அஜித்தாகவே இருப்பார். படத்தில் ரேஸிங் காட்சி, ஸ்போர்ட்ஸ் என்று அவருக்கு பிடித்தமான அனைத்தும் இருக்கும்” எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்தின் 60 வது படம் 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.