சினிமா

சமூக வலைத்தளத்தில் கசிந்த ‘அஜித்59’ புகைப்படம்

சமூக வலைத்தளத்தில் கசிந்த ‘அஜித்59’ புகைப்படம்

webteam

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடித்து வரும் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதை 'சதுரங்கவேட்டை, 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய, வினோத் குமார் இயக்கி வருகிறார். இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் அறிமுகமாகிறார். படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தில் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ஸ்ரத்தா, ஆண்ட்ரியா தாரங், அபிராமி வெங்கடாசலம் ஆகியோருக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அபிராமியும், ஆண்ட்ரியா தாரங்கும் கேரவனில் காத்திருக்கும் புகைப்படமும், ஸ்ரத்தா ஸ்ரீநாத்  பெயரை சரிதா என  கேரவன் கண்ணாடியில் தவறுதலாக எழுதி ஒட்டியிருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.