தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அஜித் நடிகராக தெலுங்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு ‘பிரேம புத்தகம்’ என்ற படத்தில்தான் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் ‘அமராவதி’ படத்தில் அறிமுகமானார். அஜித் சினிமா துறைக்குள் நுழைந்து 30 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனை சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்,
அந்த அறிக்கையில், ”ரசிகர்கள், விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அளவுக்கடந்த அன்பையும் விமர்சகர்களின் விமர்சனத்தையும் ஏற்கிறேன். வாழு வாழ விடு. ரசிகர்களுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன்” என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.