விடா முயற்சி ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிப்பு PT
சினிமா

அஜித் ரசிகர்களுக்கு பேரிடியாக இறங்கிய செய்தி.. பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி!

அஜித் ரசிகர்களுக்கு பேரிடியாக இறங்கிய செய்தி.. விலகிய விடாமுயற்சி.. ’அவ்ளோதான் நம்மல முடிச்சு விட்டீங்க போங்க..!’ மனநிலையில் ரசிகர்கள்!

Rajakannan K

அஜித் ரசிகர்களுக்கு பேரிடியாக இறங்கிய செய்தி.. விலகிய விடாமுயற்சி.. அவ்ளோதான் நம்மல முடிச்சு விட்டீங்க போங்க..!

2025ம் ஆண்டு பொங்கல், விடாமுயற்சி பொங்கலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் ரசிகர்களின் கனவில் இடியை இறக்கியுள்ளது லைகா நிறுவனத்தின் ஒற்றை அறிவிப்பு.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி வந்த படம்தான் விடாமுயற்சி. படத்தில் மங்காத்தா ஜோடி த்ரிஷா அஜித்திற்கு Pair ஆக நடித்துள்ளார். அஜர்பைஜானில் ஹாலிவுட் தரத்தில் படம் உருவான நிலையில், சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது.

அந்த டீசரில் ஒருவசனமும் இடம்பெறாமல் மிகவும் சட்டுலாக இருந்தது. எப்போது வரும் எப்போது வரும் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக, பொங்கலுக்கு படம் வெளியாவதாக டீசரிலேயே அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

சில நாட்களுக்கு முன்பு படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்ததாக படக்குழு அறிவித்தது. அத்தோடு சவடீகா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டு சோசியல் மீடியாவை அதிரவைத்தது படக்குழு. இசையமைப்பாளர் அனிருத்தும், இருங்க பாய் என்ற ட்ரெண்டிங் டேகைப் போட்டு, மசாலாவாக பாடலை கொடுத்திருந்தார்.

உடல் எடையை குறைத்து சட்டுலாக நடனத்தைப் போட்டு அஜித்தும் ஒரு கலக்கு கலக்கி இருந்தார். அப்படி, எல்லாம் சரியாக வந்த நேரத்தில்தான், படம் இன்னும் சென்ஸாருக்கு செல்லாமல் இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. படம் வெளியிட்டுக்கு 2 வாரங்களே மீதம் இருந்த நிலையில், படத்தின் அப்டேட் வராமல் இருந்தது.

இந்த நிலையில்தான், புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்த தயாரிப்பு நிறுவனமான லைகா, அதோடு சேர்த்து ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. லைகா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். என்று குறிப்பிட்டுள்ளது. 2025 பொங்கல் விடாமுயற்சி பொங்கல் என்று ஆவலாக காத்திருந்த நேரத்தில், வெளியீடு தள்ளிப்போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில், ஒரு தரப்பு ‘அவ்ளோதான் நம்மல முடிச்சு விட்டீங்க போங்க' என்று சோகத்தில் ஆழ்ந்தாலும், இருங்க பாய்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறது மற்றொரு தரப்பு.