அஜித் குமார் - தனுஷ் x
சினிமா

நேரடியாக மோதவிருக்கும் அஜித் - தனுஷ் படங்கள்.. ’குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Rishan Vengai

நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு 2025-ம் ஆண்டானது டபுள் ட்ரீட்டாக அமையவுள்ளது. இந்த ஒரே வருடத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.

முதலில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்குவரும் என கூறப்பட்ட நிலையில், திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.

குட் பேட் அக்லி

அந்தவகையில் பொங்கலுக்கு அஜித் படம் திரைக்குவரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு அஜித் திரைப்படமான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக மோதும் தனுஷ்-அஜித் படங்கள்..

‘மார்க் ஆண்டனி’ என்ற ஹிட் படத்தை இயக்கியதற்கு பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் உடன் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதியை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படமானது வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதே தேதியில் தனுஷின் இட்லிகடை திரைப்படமும் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடை

அந்தவகையில் தனுஷ் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக களத்தில் மோதிக்கொள்ள உள்ளனர். விடமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.