பத்திகிச்சு பாடல் ரேஸிங் வெர்சன் X
சினிமா

’ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்’- வெறித்தனமாக வெளிவந்திருக்கும் ’பத்திகிச்சு’ ரேஸிங் வெர்சன்!

அஜித்குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சு பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் மிரட்டிய நிலையில், அஜித்தின் ரேஸிங் கிளிப்ஸை பயன்படுத்தி பாடல் மிக்ஸிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Rishan Vengai

நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் கதைகளை சுவாரசியமாக எடுக்கும் மகிழ்திருமேனி, அஜித்துடன் இணைந்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

விடாமுயற்சி

அதன்படி வெளியான விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சினிமடோகிராஃபி, மேக்கிங், பேக்ரவுண்ட் மியூசிக் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீயாக பேக்ரவுண்ட் மியூசிக்கில் மிரட்டியிருக்கும் அனிருத்தின் இசையில் வெளியான சவதீகா மற்றும் பத்திகிச்சு பாடல்கள் டிரெண்டிங்கில் சம்பவம் செய்துவருகின்றன.

அதிலும் பத்திகிச்சு பாடலானது இளைஞர்களிடையே செம்ம வைப் ஏற்றும் பாடலாக மாறி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது, அந்தவகையில் தற்போது பத்திகிச்சு பாடலை வைத்து அஜித்தின் ரேஸிங் கிளிப்ஸை பயன்படுத்தி ரேஸிங் வெர்சனாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெறித்தனமாக வெளிவந்திருக்கும் ’பத்திகிச்சு’ ரேஸிங் வெர்சன்!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி முதலிய இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித்குமார், படப்பிடிப்பு வேலைகளை முடித்தபிறகு துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அவருடைய ’அஜித்குமார் ரேஸிங்’ கலந்துகொண்டார்.

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் மூன்றாவது இடம்பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி, முதல் கார் பந்தயத்திலேயே சாம்பியன்ஷிப் வென்று சாதனை படைத்தது. முதல்முறையாக இந்தியக்கொடி ஒரு சர்வதேச கார் ரேஸிங்கில் பறப்பதை பார்த்த ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் புல்லரிக்கும் தருணமாக அமைந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு மிகப்பெரிய சாதனைகளை தழுவியிருக்கும் அஜித்குமாருக்கு ஒரு மாஸ்ஸான வீடியோவாக வெளிவந்திருக்கிறது ’பத்திகிச்சு ரேஸிங் வெர்சன்’ வீடியோ.

அந்தவீடியோவில் அஜித்குமார் ரேஸிங் அணியில் அஜித்தின் ஆரம்பம் முதலான இறுதியில் இந்திய கொடியுடன் சாம்பியன்ஷிப் வின்னிங் தருணத்தில் பங்கேற்றது வரைக்குமா கிளிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.