பிரபல நடிகர் அஜித் குமார், நோவா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் ஸ்டைலான தோற்றத்துடன் again களமிறங்கி, சமூக வலைதளங்களில் வைரலாகிறார். “நாம விரும்புறத தேடணும், அதயே நேர்மையா, ஆர்வமா பின் தொடரனும்” என்ற அவரது உரை ரசிகர்களை கவர, ஒளிப்படங்கள், வீடியோக்கள் பரவலாக பகிரப்படுகின்றன. ஏற்கனவே AKR ரேசிங் அணியுடன் நோவா கூட்டாண்மை கொண்டுள்ளது.
செய்தியாளர் - M. மீரா
நடிகர் அஜித் குமார், பிரபல கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான நோவா (Nova)-வின் புதிய விளம்பரப் படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் நடித்திருந்த 'கேம்பா எனர்ஜி' (Campa Energy) விளம்பரத்தைத் தொடர்ந்து, தற்போது நோவா (Nova) எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் அஜித்தின் புதிய ஸ்டைலான தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுத் தொடர்பான ஒளிப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விளம்பரத்தில் "நாம விரும்புறத தேடணும், அதயே நேர்மையா, ஆர்வமா பின் தொடரனும்" என்று அஜித் பேசும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
அஜித்தின் கார் பந்தய அணியான 'அஜித் குமார் ரேசிங்' (Ajith Kumar Racing - AKR) உடன் நோவா நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளது .