சினிமா

இந்திய அளவில் ட்விட்டரை தெறிக்கவிடும் ‘நேர்கொண்ட பார்வை’

rajakannan

இந்தியா அளவிலான ட்விட்டரில் நேர்கொண்ட பார்வை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் என்றாலும், அஜித் நடிப்பதால் தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இன்று வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ட்விட்டரை ஆட்கொண்டுள்ளது. இந்தியா அளவிலான ட்விட்டரில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் தொடர்பாக மட்டுமே #NerKondaPaarvaiFromToday, #NerKondaPaarvaiFdfs, #NKPFestivalBegins ஆகிய ஹேஷ்டேக்குகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

இந்த ஹேஷ்டேக்குகளில் அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.