சினிமா

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் அஜித் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் அஜித் ரசிகர்கள்

rajakannan

நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு அஜித் குமாரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘பிகில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் பிறந்தநாள் மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் இரண்டினையும் ஒட்டி ட்விட்டரில் நிறைய ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. #HBDEminentVijay முதலிடத்தில் உள்ளது. #BIGIL, #Thalapathy63FLDay, #HBDThalapathyVIJAY உள்ளிட்ட ஹேஷ்டேக் ட்ரெண்ட்குகள் ஆகியுள்ளன.

அந்த வரியில் இந்திய அளவில் 4 ஆவது இடத்தில் #HBDvijay_THALAfans என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு பிறந்தநாள் சொல்லி வருகின்றனர். அதில், விஜய் - அஜித் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற படத்தை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல், விஜய் - அஜித் இருவரும் சேர்ந்து நடத்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை பலரும் பதிவிடுகின்றனர். 

இதற்கிடையில், விஜய்க்கு அஜித் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய்சேதுபதி படத்தை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளனர்.