அஜித் 58 படத்தின் இயக்குநர் சிவா என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்திற்கு எப்போதும் ரிஸ்க் எடுப்பது பிடிக்கும். அதே நேரம் அவர் அன்புக்கு அடிமையானவர். ரிஸ்க்கும் எடுக்க வேண்டும். அதே நேரம் அன்பாகவும் இருக்க வேண்டும். இந்த சேஃப் ஜோன் இயக்குநர் சிவா. ஆகவே மறுபடியும் அவர்தான் அஜித் 58ன் இயக்குநர் என்பது முன்பே பேசப்பட்டது. ஆனால் அது அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவாதான் அஜித்58 படத்தை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவா 4வது முயைாக இணைய உள்ளார். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே மீண்டும் இந்தப் படத்தை தயாரிக்கிறது. விரைவில் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.