சினிமா

வதம் செய்ய காத்திருக்கும் தல அஜித்

வதம் செய்ய காத்திருக்கும் தல அஜித்

webteam

அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘தல 57’ திரைப்படத்திற்கு ‘வதம்’ என்று பெயர் வைத்துள்ளதாக சமுக வலைத்தளங்களில் டிரண்டாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘தல 57’-ஆவது படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ என்று தலைப்பு வைக்கப்படிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான வீரம் மற்றும் வேதாளம் படத்தின் தலைப்பு ‘வ’ வரிசையில் வைக்கப்படிருந்ததால் இந்தப்படத்தின் தலைப்பும் அதே வரிசையில் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் டிரண்டாகி வந்த நிலையில் தற்போது படத்தின் தலைப்பு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ என்று இருக்கக்கூடும் என்ற செய்தி பரவி வருகிறது. இதையடுத்து #Vadham என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை ரசிகர்கள்டி டிரண்டாக்கி வருகின்றனர்.

இந்தப்படத்தில் அஜித் இண்டர்போல் அதிகாரியாகவும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்து உள்ளார். வேதாளம் படத்திற்கு பிறகு அஜித்துடன் இணைந்து அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இயக்குனர் சிவா- அஜித் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் படம் வெற்றி அடைந்திருப்பதால் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப்படம் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் இப்போதே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.