சினிமா

“தனுஷுடன் நடிக்க பல நடிகைகள் விரும்புவார்கள்” - ஐஸ்வர்யா ராஜேஷ்

“தனுஷுடன் நடிக்க பல நடிகைகள் விரும்புவார்கள்” - ஐஸ்வர்யா ராஜேஷ்

webteam

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ‘வடசென்னை’ பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படக்குழுவினர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் நடிகர் தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், வெற்றிமாறன், சமுத்திரக்கனி, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “2012ல் எனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் ‘காக்கா முட்டை’. அதை தனுஷ்தான் தயாரித்திருந்தார். ஒரு நடிகை இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சு அதற்கு ஒருபிரேக் கிடைக்குமானு தெரியல. ஆனா அது எனக்கு கிடைச்சது. அதற்கு பிறகு இப்ப ‘வடசென்னை’. இந்தப் படத்தோட டைட்டில் அறிவிப்பு வெளியான போதே நான் நிறைய பேர்கிட்ட எனக்கு ஏதாவது ஒரு கேரக்டர் கிடைச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். 

அந்த நேரத்துலதான் ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணினார். அவரை சந்திச்சேன். அவர் ஒரு கேரக்டரை பற்றி விவரிச்சார். ‘இல்ல சார்..இது வேண்டாம். நாம வேற ஒரு சந்தர்ப்பத்தில் சேர்ந்து பண்ணலாம்’னு சொன்னேன். அதற்கு பின்னாடி திரும்பவும் ஒரு ரோலுக்கு கூப்பிட்டார். நான் ‘என்ன ரோலுக்கு கூப்பிடுறீங்க?’னு கேட்டேன். அவர் ‘நீங்க வாங்க, சொல்றேன்’னு சொன்னார். ‘இல்ல சார், நீங்க சொல்லுங்க, இல்லையினா நான் வர மாட்டேன்’னு சொன்னேன். அப்புறம்தான் சொன்னார், ‘தனுஷுக்கு ஜோடியாக நடிக்கதான் கூப்பிடுகிறேன் வா’னு சொன்னார். 

தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவருடன் சேர்ந்து நடிக்க பல நடிகைகள் விரும்புவார்கள். ஏற்கெனவே இயக்குநர் பாண்டிராஜ் என்னை ‘லேடி தனுஷ்’ என்று குறிப்பிட்டு சொல்லியிருந்தார். அது எனக்கு மிகப்பெரிய பரிசு. அவர் ஒரு இந்திய நடிகர். அவருடன் நடிக்கும் போது எனக்கு ஸ்பெஷலான உணர்வு இருந்தது. தனுஷே என்னை லைவ் பண்ணிவிடார். முதன்முறை பார்த்ததும் படத்தில் என்னை லவ் பண்ணிவிடுவார். படத்தோட கதையே எனக்குத் தெரியாது. வெற்றிமாறன் மேல அவ்வளவு நம்பிக்கை” என்றார்.