சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த ’பேபி சாரா’!

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த ’பேபி சாரா’!

sharpana

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் தெய்வத்திருமகள் புகழ் பேபி சாரா நடிக்கவுள்ளார்.

 மணிரத்னத்தின் கனவுப்படமான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் பல வருடங்களாக படமாக்க முயற்சி செய்து தற்போதுதான் இயக்கி வருகிறார். மணி ரத்னமும் லைகா நிறுவனமும் பெரும் பொருட்செலவில் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தில், நடிகர் விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, சரத்குமார், ராய் லட்சுமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகமாக தயாராகவுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது பேபி சாரா, பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார்.  

 இவர்  நடிகர் விக்ரமின் நடித்த ஏ.எல் விஜய் இயக்கிய ’தெய்வத் திருமகள்’ படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்யின் இளம் பருவத்தில் பேபி சாரா நடிக்கவுள்ளார். ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் வரவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கான ஷூட்டிங் ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்படவுள்ளது.