சினிமா

ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை!

ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை!

webteam

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையில் நடிக்க ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை கதைகள் இப்போது சினிமாவாக்கப்பட்டு வருகி ன்றன. அந்த வரிசையில் இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகிறது. அவரது வாழ்க்கை கதையை மூன்று பேர் இயக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

முதலில் விஜய் இயக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை விப்ரி மீடியா சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரிக்கிறார். இவர்தான் தென்னிந்திய மொழிகளுக்கு வெளிநாட்டில் விருது வழங்கும் ’சைமா’ விழா வை
நடத்தி வருகிறார். மேலும், 83 ஆம், ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து, ’83 world cup’, ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமான ’என்டி ராமராவ்’ சுயசரிதை ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அன்றைய தினமே படத்தின் முதல் தோற் றம் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளனர். ஜெயலலிதாவாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலர் போட்டி போடுகின்றனர். த்ரிஷா, நயன்தாரா, ஜோதிகா ஆகியோரில் ஒருவரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. 

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்துள்ளார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் ’சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கை கதையை படமாக்குகிறார். இதை மும்பையை சேர்ந்த ஆதித்யா பரத்வாஜ் தயாரிக் கிறார். இதுபற்றி ஆதித்யா பரத்வாஜ் கூறும்போது, ’இந்தப் படத்தை இயக்குவது உறுதியாகி இருக்கிறது. படத்துக்கு தற்காலிகமாக, புரட்சித் தலைவி’ என்று டைட்டில் வைத்திருக்கிறோம். சிலர் ’அம்மா’ என்பதை இதோடு சேர்க்குமாறு கூறியுள்ளனர். இசையமைக்க இளைய ராஜாவிடம் பேசியிருக்கிறோம். படத்தில் சசிகலா, எம்.ஜி.ஆர் கேரக்டர்களும் வருகிறது. எம்.ஜி.ஆராக நடிக்க கமல்ஹாசன் மற்றும் மோகன் லாலிடம் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை’ என்றார். 

ஜெயலலிதாவாக நடிக்க யாரிடம் பேசியுள்ளீர்கள்? என்று ஆதித்யாவிடம் கேட்டபோது, ‘அனுஷ்கா ஷெட்டி அல்லது ஐஸ்வர்யா ராய் ஆகியோரில் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம். அதற்காக இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றார்.