தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருடன் ஐஸ்வர்யாராய் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜா தயாரிக்கும் இந்தப்படம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ராயலசீமாவை ஆண்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.