Aishwarya Lekshmi x page
சினிமா

"எல்லா அசல் சிந்தனைகளையும் பறித்துவிட்டது" - சமூக வலைத்தளங்கள் பற்றி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

"எல்லா அசல் சிந்தனைகளையும் பறித்துவிட்டது" என சமூக வலைத்தளங்கள் பற்றி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

Johnson

"எல்லா அசல் சிந்தனைகளையும் பறித்துவிட்டது" என சமூக வலைத்தளங்கள் பற்றி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சூரியுடன் இவர் நடித்த `மாமன்' மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது இவர் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Aishwarya Lekshmi

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், "நெடுநாளாக சோஷியல் மீடியாவில் இருப்பது, நான் இந்த ஆட்டத்தில் இருப்பதற்கு மிக முக்கியம் என்ற யோசனை சரி என நினைத்தேன். காலத்தோடு நாமும் பயணிக்க அது அவசியம் எனவும், நாம் சார்ந்திருக்கும் துறையின் தன்மை இதுதான் எனவும் நினைத்தேன். ஆனால், நமக்கு ஏற்றவாறு இருக்கும் எனச் சொல்லப்பட்ட ஒன்று, இப்போது அதற்கு ஏற்றவாறு என்னை மாற்றிவிட்டது. அது எனது வேலை மற்றும் தேடல் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து வெற்றிகரமாக என்னைத் திசை திருப்பிவிட்டது. அது என்னிடமிருந்த எல்லா அசல் சிந்தனைகளையும் பறித்துவிட்டது. என் சொற்செறிவு மற்றும் மொழியைப் பாதித்துள்ளது. மேலும், எளிய விஷயங்களில் அடையும் இன்பத்தை மகிழ்ச்சியற்றதாக மாற்றியுள்ளது. பொதுமைப்படுத்தப்பட்ட ஓர் அச்சிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகவும், ஒரு சூப்பர்நெட்டின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்பவும் நான் இருக்க மறுக்கிறேன். ஒரு பெண்ணாக, மேம்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் பற்றி அறிந்து, அதை எதிர்க்க இன்னும் கடினமாக பயிற்சி பெற்றேன். 

சிறிது காலத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் அசல் சிந்தனை இது. நான் மறக்கப்படுவதற்கான அபாயம் இருந்தும், இதனைச் செய்கிறேன். எனவே எனக்குள் இருக்கும் கலைஞரையும், சிறுமியையும் இணையத்தில் இருந்து அப்புறப்படுத்துகிறேன். வாழ்க்கையில் இன்னும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்கினால், எனக்கு பழைய பாணியிலான அன்பைக் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் உங்கள், ஐஸ்வர்யா லட்சுமி" என குறிப்பிட்டுள்ளார்.

aishwarya lekshmi

இதேபோல் நேற்று நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொள்வதாய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.