சினிமா

ராக்ஸ்டாரை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ்

ராக்ஸ்டாரை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ்

Rasus

அமெரிக்காவில் பிரியங்கா சோப்ராவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ் அவரை ராக்ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஐநா சபையில் நடனமாடிய ஐஸ்வர்யா தனுஷ் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானார். அவர் ஆடியது பரதமே இல்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் வசைபாடியுள்ளனர்.

இந்நிலையில், இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை அமெரிக்காவில் சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ராவை சந்தித்த ஐஸ்வர்யா, அவருடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ’நமது பெருமைக்குரிய ராக்ஸ்டாருடன் அருமையான இரவு சந்திப்பு’ என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.