சினிமா

`நண்பேன்டா` : நெருங்கிய நண்பர் மோகன் பாபுவுடன் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்

`நண்பேன்டா` : நெருங்கிய நண்பர் மோகன் பாபுவுடன் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்

sharpana

தனது நெருங்கிய நண்பர் நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த்  இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இருவரும் சினிமா வாய்ப்புகளை சென்னைக்கு வந்து ஒன்றாகத்தான் தேடியிருக்கிறார்கள். ரஜினி தமிழிலும், மோகன்பாபு தெலுங்கு சினிமாலும் முன்னணி ஹீரோக்களாக வலம் வந்தனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத பின்னணிக்கு மோகன் பாபுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆந்திர அரசியலில் நுழைந்த மோகன் பாபு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ‘நண்பேன்டா’ நட்பு இப்போதும் தொடர்கிறது.

சமீபத்தில் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்கிறாக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த் மோகன் பாபு வீட்டிற்கு சென்று தங்கியிருக்கிறார். அப்போது, மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு அதே நட்பும்… அதே ஸ்டைலிஷும்.. அதே புன்னைகையும் கலந்து புகைப்படங்களை அள்ளிக் குவித்திருக்கிறார்.

இன்று அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் “அசல் கேங்ஸ்டர்ஸ்” பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.