’பாகுபலி’ இயக்குநரின் அடுத்த ஹீரோக்கள் என்.டி.ஆரா? அல்லது ராம் சரணா என்று குழப்பம் எழுந்துள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி’. முதல் பாகம் பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். அதுவும் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இந்நிலையில் இதனையடுத்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி அடிப்பட்டது. ஆனால் அது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே ராஜமௌலி தன் டிவிட்டர் பக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணுடன் சேர்ந்து மிக கேஷூவலாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை வெலியிட்டுள்ளார். அதில் எந்தவித அறிவிப்பும் இல்லை. ஆனால் நீண்ட மெளனத்தை குறிப்பதை போல ஒரு கோடிட்டுள்ளார். கூடவே ஒரு புதிரான ஸ்மைலியையும் இட்டுள்ளார்.
இதனால் ராஜமௌலியின் அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக டோலிவுட்டில் தகவல் தட்டுப்படுகிறது. வெகு விரைவில் இந்தப் புகைப்படத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் செய்தி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.