சினிமா

“என் ஆறு வருஷ உழைப்பு” - வருத்தத்தில் நந்திதா தாஸ்

“என் ஆறு வருஷ உழைப்பு” - வருத்தத்தில் நந்திதா தாஸ்

webteam

நடிகை நந்திதா தாஸ் ட்விட்டர் பக்கத்தில் தனது மன வேதனையை குறித்து கருத்திட்டு உள்ளார்.

உருது இலக்கியத்தில் பிதாமகர் எழுத்தாளர் சதத்சன் மாண்டோ. இந்தியா- பாகிஸ்தான் பிரிந்தபோது எல்லையில் என்ன நடந்தது என்பதை கண்கூடாக கண்டவர். அந்த வாழ்க்கை கொடுமைகளை இலக்கியத்தின் வழியே மக்களிடம் கொண்டு சேர்த்தவர். வாழ்க்கையை எழுத்துக்காகவே அர்ப்பணித்து கொண்ட இந்த எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘மாண்டோ’ என்ற படம் பாலிவுட்டில் இன்று வெளியாகி உள்ளது. இதில் நவாஸுதின் சித்திக் எனப் பலர் நடித்துள்ளனர். நந்திதா தாஸ் இதனை இயக்கி உள்ளார். உலக அளவில் அறியப்பட்டவர் மாண்டோ என்பதால் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில், இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமான திரையரங்கங்களில் வெளியிடப்படவில்லை. சில தொழில்நுட்ப கோளாறுகளால் அது தடைப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இதை குறித்து நடிகை நந்திதா தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறேன். ’மாண்டோ’ ஆறு வருடகால உழைப்பு. பொது மக்களின் ஈடுப்பாட்டின் உச்சநிலையை இன்று காலை அறிய முடிந்தது. படம் வெளியாகவில்லை என்றால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்” என்று கூறியிருக்கிறார். 

இதற்கு தயாரிப்பு சார்பில், “ தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதால் ‘மாண்டோ’ திரைப்படம் சில இடங்களில் வெளியாகவில்லை என்பதை நாங்கள் தெரியப்படுத்த விரும்புகிறோம். இந்தப் படத்தை தவறவிட்டுவிடாதீர்கள். முயற்சித்து படத்தை கண்டு ரசியுங்கள்”என்று கூறப்பட்டுள்ளது.