சினிமா

ரூ. 500 கோடியில் சினிமாவாகிறது ராமாயணம்

ரூ. 500 கோடியில் சினிமாவாகிறது ராமாயணம்

webteam

மகாபாரதத்தை ரூ.1000 கோடி செலவில் படமாக எடுக்க சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதோ இப்போது ராமாயணத்தையும் படமாக்கக் கிளம்பியிருக்கிறார் பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த். ராமாயணம் திரைப்படத்துக்கு 500 கோடி ரூபாய் செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் தயாரிப்பில் ’மகதீரா’ படம் 50 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 டி வடிவில் தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ராமாயணம் படம் வெளியாகவுள்ளது. அதிகச் செலவில் எடுக்கப்படும் இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது.