தனுஷ்,
தனுஷ், கோப்புப் படம்
சினிமா

2வது முறையாக பிரபல இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்- வெளியான தகவல்!

சங்கீதா

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியான ‘வாத்தி’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘கே.ஜி.எஃப்.’ படம் போன்று ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் எடுக்கவுள்ளதாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்திருந்ததால், இதற்காக நடிகர் தனுஷ் புதிய லுக்கில் வலம் வருகிறார்.

கேப்டன் மில்லர்

1930-கள் மற்றும் 40-களில் மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து பீரியட் படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள்மோகன், பிரபல கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், மூர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது முறையாக இணையவுள்ளார். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சௌத் இணைந்து தயாரிக்கவுள்ளது. ‘கர்ணன்’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இவர்கள் இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.