சினிமா

27 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையும் ’ரோஜா’ ஜோடி!

webteam

27 வருடத்துக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து மீண்டும் நடிக்க இருக்கிறார்,  மதுபாலா.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்து சூப்பர் ஹிட்டான படம். ’ரோஜா’. இந்தப் படம் மூலம்தான் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பாளராக அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தில் ஜோடியாக அரவிந்த் சாமியும் மதுபாலாவும் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடக்கிறார்கள். இந்தப் படம் இந்தியில் உருவாகிறது.

இதுபற்றி நடிகை மதுபாலா கூறும்போது, ’இப்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் நான் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. விரைவில் அரவிந்த சாமியுடன் இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். ’ரோஜா’வுக்குப் பிறகு அவருடன் நடிக்கும் படம் இது. அந்த படத்தின் படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக் கிறேன்’ என்றார்.