Adolescence  Emmy Award
சினிமா

Emmy Awardல் விருதுகளை குவித்த Adolescence | 77th Primetime Emmy Awards

வெளியான சமயத்திலேயே பரவலான பாராட்டுகளை பெற்ற Adolescence இப்போது விருதுகளையும் குவித்துள்ளது கூடுதல் கவனத்தை குவித்திருக்கிறது.

Johnson

அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் Emmy Award இன்று வழங்கப்பட்டுள்ளன. இவ்விருது பற்றி சொல்வதென்றால், திரைப்படங்களுக்கு ஆஸ்கர், இசைக்கு கிராமி போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எம்மி. அப்படி இம்முறை 77வது Primetime Emmy Awardsல் அதிக விருதுகள் பெற்ற முக்கிய படைப்பை பார்க்கலாம்.

`The Pitt', `The Studio', `Severance', `Hacks', போன்ற சீர்ஸ்கள் பல்வேறு விருதுகளை வென்றன. பேட்மேன் கதையில் வரும் `பெண்குயின்' கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவான `The Penguin' சீரிஸில் Sofia Falcone பாத்திரத்தில் நடித்த Cristin Milioti, Outstanding Lead Actress In Series விருதை வென்றார். 

இந்த விருதுகளில் உண்மை சம்பவத்தை தழுவி Philip Barantini இயக்கத்தில் உருவான Adolescence சீரிஸ் Outstanding Limited Series, Outstanding Lead Actor In A Limited Series (Stephen Graham), Outstanding Supporting Actor In A Limited Series (Owen Cooper), Outstanding Supporting Actress In A Limited Series (Erin Doherty), Outstanding Writing For A Limited Series (Jack Thorne, Stephen Graham) மற்றும் Outstanding Directing For A Limited Series (Philip Barantini) ஆகிய ஆறு விருதுகளை இன்று பெற்றுள்ளது. கிரியேட்டிவ் விருதுகளை சேர்க்காமல் பார்த்தால் இன்று அதிக விருதுகள் பெற்றிருப்பது Adolescenceதான். வெளியான சமயத்திலேயே பரவலான பாராட்டுகளை பெற்ற Adolescence இப்போது விருதுகளையும் குவித்துள்ளது கூடுதல் கவனத்தை குவித்திருக்கிறது. 

கிரியேட்டிவ் விருதுகளை சேர்த்தால் முதல் இடத்தில் 13 விருதுகளுடன் The Studio, இரண்டாம் இடத்தில் 9 விருதுகளுடன் `The Penguin', மூன்றாம் இடத்தில் 8 விருதுகளுடன் `Adolescence', 'SNL50: The Anniversary Special', `Severance' ஆகியவை இடம் பிடிக்கும்.