சினிமா

எம்.எஸ்.சுப்புலட்சுமியாகணும்: மணிரத்னம் ஹீரோயின் ஆசை

எம்.எஸ்.சுப்புலட்சுமியாகணும்: மணிரத்னம் ஹீரோயின் ஆசை

webteam

எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க வேண்டும் என்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி கூறினார். 

மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்தி நடிகையான இவர், டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, ’எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதோடு மகாராணி காயத்ரி தேவியாகவும் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். எனது கனவு ரோல் என்றால் அது போர்புரியும் இளவரசியாக நடிக்க வேண்டும் என்பதுதான். இந்தியில் ரன்பீர் கபூர், ரன்வீர் கபூர் ஆகியோருடன் பணியாற்ற விரும்புகிறேன்’ என்ற அதிதி ராவ், மணிரத்னம்தான் அவரது பேவரைட் இயக்குனர் என்று சொன்னார். அவருடன் மேலும் ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக வரும் தகவல்கள் பற்றி பதில் ஏதும் சொல்லவில்லை அதிதி.