சினிமா

உதவியாளர்களுக்கு ஹீரோயின் போட்ட திடீர் தடை!

உதவியாளர்களுக்கு ஹீரோயின் போட்ட திடீர் தடை!

webteam

தமிழில், தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம்’, மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ். இப்போது பத்மாவதி, பூமி ஆகிய இந்தி படங்களில் நடித்துவருகிறார். இவர் தனது உதவியாளர்கள் உள்பட தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கு திடீர் தடை ஒன்றை விதித்துள்ளார். யாரும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிற தடைதான் அது. 
அதோடு விட்டுவிடாமல் துணி மற்றும் சணலால் ஆன பைகளை அதிகமாக வாங்கி குவித்துள்ள அதிதி, அதை தனது உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்து வருகிறார். கூடவே, பிளாஸ்டிக்கை தவிருங்கள் என்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 
நடிகையின் இந்த திடீர் சுற்றுச்சூழல் காதலுக்கு என்ன காரணம் என்று யோசித்து வருகிறார்கள் உதவியாளர்கள்.