சினிமா

டுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா..!

டுவிட்டரில் இருந்து வெளியேறினார் திரிஷா..!

Rasus

ஜல்லிக்கட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை திரிஷா, டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த முடிவு தற்காலிகமானதே என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜல்லக்கட்டிற்கு எதிரான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை திரிஷா கருத்து கூறிவருவதாக அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவுக்கு எதிராக மீம்ஸ்-க்ள் வெளியிடப்பட்டன.

இதனையடுத்து, தாம் ஒரு போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதில்லை என நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு பெண்ணையும் அவரது குடும்பத்தையும் இழிவாகப் பேசுவதுதான் தமிழர் கலாசாரமா என கேள்வி எழுப்பிய அவர், இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்களை தமிழர் என சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும் எனவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக அவர் வெளியேறியுள்ளார்.