சினிமா

என்னைப்போன்று எந்த பின்னணியும் இல்லாதவர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறேன்: டாப்ஸி

sharpana

நடிகை டாப்ஸி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துளார்.

இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்ஸி நடிப்பில் ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சபாஷ் மிது’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து, அவர் பேசும்போது,

“இந்த புதிய பயணத்தைத் தொடங்குவதற்கும், சினிமா மீதான என் அன்பை எனது தயாரிப்பு நிறுவனமான ‘அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் ’ மூலம் பன்முகப்படுத்துவதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையின் 11 ஆண்டுகளில் ரசிகர்களும் சினிமாத்துறையினரும் நிறைய ஆதரவையும் அன்பையும் அளித்துள்ளனர்.

அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம், நான் சினிமா துறைக்குத் திருப்பித் தருவதோடு, என்னைப் போன்ற எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு திருப்புமுனையைத் தேடும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே எனது நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலில் த்ரில்லர் கதையை தயாரிக்கவிருகிறார். அதில்,டாப்ஸிதான் ஹீரோயினாக நடிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.