உங்கள் அப்பாவை போல நீங்களும் சிறந்த மனிதர் என சிம்புவை நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டியுள்ளார்.
பட வாய்ப்பு தருவதாகக் கூறி தெலுங்கு திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது புகார்களை கூறினார். இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இது தமிழ், தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உங்கள் அப்பா டி.ராஜேந்தரை போல நீங்களும் சிறந்த மனிதர் என சிம்புவை நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டியுள்ளார். பேட்டி ஒன்றில் சிம்பு குறித்த நடிகை ஸ்ரீரெட்டியிடம் கேட்கப்பட்டது. அதாவது எந்தவித பெண்ணை நீங்கள் திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு அந்தப் பேட்டியில் பதிலளித்துள்ள நடிகர் சிம்பு, ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றார். மேலும் பேசிய அவர் தற்போது பெண்களுக்கான உரிமையை சில தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு ஆணை போல நான் அனைத்தையும் செய்வேன் என்பது பெண்கள் மேம்பாடு அல்ல. ஒரு பெண் தான் விரும்புவதை செய்ய நினைக்கும் போது சிலர் அதனை தடுத்தால் அதனையும் மீறி சாதித்துக் காட்டுவதே பெண்களின் மேம்பாடு என்றார். இதற்கு தனது ட்விட்டரில் பதிலளித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி, “எனது கேள்விக்கு பதிலளித்ததற்கு நன்றி சார். உங்கள் அப்பா டி.ராஜேந்தரை போல நீங்களும் சிறந்த மனிதர். உங்களை மிக அதிக அளவில் மதிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இயக்குநர்கள், நடிகர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி கொடுத்த புகார் மீது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என இயக்குநர் டி.ராஜேந்தர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.