சினிமா

பிக்பாஸ் குறித்து சிம்ரன் போட்ட ட்வீட்

Rasus

எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தான் பங்கேற்கவில்லை என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்க உள்ளது. இதனிடையே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் போட்டியாளராக பங்கேற்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ சில நிகழ்ச்சியில் நான் பங்கேற்கபோவதாக வெளியாகும் செய்தியை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் போட்டோஷாப் வேலைகளை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். தற்போது எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்கவில்லை. வருங்காலத்திலும் பங்கேற்கபோவதில்லை. தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.