Shruti Haasan Shruti Haasan - insta
சினிமா

’கல்யாணத்துக்குச் செலவா..’ நடிகை ஸ்ருதி ஹாசன் சொன்ன ஸ்வீட் அட்வைஸ்!

திருமண விழாக்களில் வீணாகும் கோடிக்கணக்கான செலவுகளை குறைத்து, உறவின் அர்த்தத்தையே முக்கியமாகக் கொள்ள வேண்டும் என ஸ்ருதி ஹாசன் வலியுறுத்தல்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த தனது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். கடந்த காலத்தில் தான் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாகச் சென்றதாகவும், ஆனால் சட்டப்பூர்வ திருமணம் மற்றும் பிரம்மாண்டமான திருமணச் செலவுகள் குறித்து தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Soha ali khan

நடிகை சோஹா அலி கான் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய ஸ்ருதி ஹாசன், சில விஷயங்களில் தான் மிகவும் பாரம்பர்யமான எண்ணம் கொண்டிருந்தாலும், திருமணத்தை ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாக பார்ப்பதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார். துணையுடன் தினமும் ஒருவரையொருவர் தேர்வு செய்து வாழ்வதே தனக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்களுக்குச் செலவிடப்படும் மிகப்பெரிய தொகைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த அளவுக்குச் செலவு செய்வது யாருக்காக? அதற்குப் பதிலாக அந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கலாம்” என்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கை மற்றும் தாய்மை குறித்தும் பேசிய ஸ்ருதி, எதிர்காலத்தில் ஒரு தாயாக இருக்க விரும்புவதாகவும், குழந்தையைத் தத்தெடுப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் கூறினார். அதே நேரத்தில், உயிரியல் ரீதியாகவும் குழந்தை பெற்றுக் கொள்ளும் விருப்பம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.