சினிமா

கணவருடன் சமந்தா கொண்டாடிய ‘ஹாட்’ நியூ இயர்..!

கணவருடன் சமந்தா கொண்டாடிய ‘ஹாட்’ நியூ இயர்..!

webteam

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடிகை சமந்தா - நாகசைதன்யா எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யாவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது சமந்தா உடுத்தி இருந்த உடை மிக கவர்ச்சியாக இருந்தது. அதனை கண்ட அவரது ரசிகர்கள் அப்படத்தை பரபரப்பாக பகிரத் தொடங்கினார்கள். அப்படியே அது சில மணிநேரத்தில் வைரலானது. 
மேலும் இன்ஸ்ட்ராகிராமில் தனது கணவர் குறித்து சமந்தா “உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களால் முடிந்தால் அதை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். இதுதான் நான் எடுத்த முடிவுகளில் மிகச்சரியான முடிவு. எனது எதிர்காலத்தின் மீது மிகுந்த உற்சாகமாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.