Samantha புதிய தலைமுறை
சினிமா

மேடையில் கண்கலங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? விளக்கமளித்த நடிகை சமந்தா!

”நான் மேடையில் கண்கலங்கி நிற்பதற்கு காரணம் எமோஷன் கிடையாது” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Prakash J

தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘சுபம்’ பட புரமோஷன் நிகழ்ச்சியின்போது (இப்படத்தின் மூலம் சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்) சமந்தா கண்கலங்கினார். இதேபோல, சமீப காலமாக பல நிகழ்ச்சி மேடைகளில் சமந்தா கண் கலங்கி நின்றது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்த நடிகை சமந்தா, “அடிக்கடி நான் மேடையில் கண்கலங்கி துடைப்பது எமோஷனால் நடப்பது கிடையாது. பிரகாசமான விளக்குகளைப் பார்க்கும்போது என் கண்கள் கூசும். அதனால் இயற்கையாகவே எனக்குக் கண்ணீர் வருகிறது. எனக்கு சென்சிடிவ் கண்கள். அதன் காரணமாகவே, நான் அடிக்கடி கண்களைத் துடைக்கிறேன். நான் மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழவில்லை. நான் அழுவதாகப் பலர் வதந்திகளைப் பரப்புகின்றனர். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், நலமுடன் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.