சினிமா

லோகேஷ் கனகராஜின் ‘தளபதி 67’ படத்தில் வில்லியாக நடிக்கும் சமந்தா? - வெளியான தகவல்

சங்கீதா

நடிகர் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்தில் பிரபல தென்னிந்திய நடிகையான சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் ‘வாரிசு’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம், சங்கீதா க்ரிஷ், சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதியப் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம், தாறுமாறான வெற்றியால், அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப்படத்தில் நடிகை சமந்தாவை, விஜய்க்கு வில்லியாக நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நடிகை சமந்தா இதற்கு முன்னதாக, விஜய்யுடன் 'கத்தி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.