’மாரி-2’ படக்குழுவினரோடு நடிகை சாய் பல்லவி தனது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார்.
மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்தப் படத்தில் இவரது மலர் டீச்சர் கேரக்டர் பேசப்பட்ட ஒன்று. இதையடுத்து தெலுங்குக்குச் சென்ற அவர், ’தியா’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது தனுஷூடன் ’மாரி 2’, சூர்யாவுடன் ’என்ஜிகே’ படங்களில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவிக்கு நேற்று 26 வது பிறந்த நாள். அதை ’மாரி 2’ படக்குழுவினரோடு கொண்டாடினார். அவருக்காகக் கொண்டு வரப்பட்ட சிறப்பு கேக்கை வெட்டினார். ஹீரோ தனுஷ், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், இயக்குனர் பாலாஜி மோகன், மலையாள நடிகர் டோவினோ தாமஸ், ஸ்டண்ட் சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் அப்போது இருந்தனர். அவர்கள் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.