நடிகை ருக்மிணி விஜயகுமார் web
சினிமா

நடிகை ருக்மிணி விஜயகுமாரின் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.. டேக்ஸி டிரைவர் கைது!

நடிகை மற்றும் டான்சருமான ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்த 23 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

கன்னட நடிகை ருக்மிணி விஜயகுமாரின் 23 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிய நபரை பெங்களூரு காவல் துறையினர் கைது செய்தனர்.

என்ன நடந்தது?

கன்னட நடிகையான ருக்மிணி விஜயகுமார் கம்பன் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள சென்றபோது, தனது கார் கதவை லாக் செய்யாமல் சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட முகமது என்ற நபர் ருக்மிணியின் காரில் இருந்த விலையுயர்ந்த ஹேண்ட் பேக், பர்ஸ், வைர மோதிரம், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார்.

நடிகை ருக்மிணி விஜயகுமார்

இதுகுறித்து ருக்மிணி அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், திருடிச்சென்ற முகமது என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டேக்ஸி ஓட்டுநர் என்பது தெரியவந்துள்ளது.

நடிகை ருக்மிணி விஜயகுமார்

கன்னடம், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளில் நடித்துவரும் நடிகை ருக்மிணி விஜயகுமார், ஆனந்த தாண்டவம், கோச்சடையான், சீதா ராமம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.