நடிகை புஷ்பலதா முகநூல்
சினிமா

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்; துயரில் திரையுலகம்!

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

PT WEB

பழம்பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம் ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக காலமானார்.

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1958இல் வெளியான செங்கோட்டை சிங்கம், நானும் ஒரு பெண் உள்ளிட்ட திரைப்படங்களில் புஷ்பலதா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். புஷ்பலதாவின் இறுதிச்சடங்கு, நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.