சினிமா

கன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார்வதி!

கன்னியாஸ்திரி விவகாரத்தில் எம்.எல்.ஏவை விளாசிய பார்வதி!

webteam

கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாஸ்திரியை கடுமையாக விமர்சித்த எம்.எல்.ஏவை சாடியுள்ளார் நடிகை பார்வதி.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கன்னியாஸ்திரிகள் ஐந்து பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், பிஷப்புக்கு ஆதரவாக பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் என்பவர், பாதிக்கப்பட்ட கன்னி யாஸ்திரியை மோசமாக விமர்சித்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அவருக்கு எதிரான சமூக வலைத் தளங்களி ல் ’போட்டிமவுத் பிசி (pottymouthpc), ’வாயைமூடேடா பிசி’ (Vayamoodeda PC) என்ற ஹேஷ்டேக்குகள் வைரலானது.

இந்நிலையில் நடிகை பார்வதியும் அந்த எம்.எல்.ஏவுக்கு எதிராக கடுமையாகச் சாடி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த பிரசாரம் பெருமை யாக இருக்கிறது. அந்த மனிதரின் கருத்து வெறுக்கத் தக்க வாந்தியை போன்றது. அது பற்றி பேசியது போதும். கன்னியாஸ்தி ரிகளின் தைரியத்துக்கு சல்யூட்’ என்று தெரிவித்துள்ளார்.

இதே போல இந்தி நடிகை ரவீண்டா டாண்டனும் ஜார்ஜூக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளார். ‘இதுபோன்ற வார்த்தைகள் பாதிப்பட்டவரைக் கண்டு பயத்தில் வெளிவருவது. தேசிய மகளிர் ஆணையம் இதில் களமிறங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் ஜார்ஜ்க்கு சம்மன் அனுப்பியது. இந்நி லையில், தான் உணர்ச்சி வசப்பட்டு அப்படிக் கூறி விட்டதாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.